“அட.. இந்த வெர்ஷன் நல்லாருக்கே”.. 60 வருசம் கழிச்சு அதிரடியாய் லோகோவை மாற்றிய பிரபல செல்போன் நிறுவனம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஸ்மார்ட்போன்களின் வருகை இந்த ஜெனரேஷனின் மிகப்பெரிய புரட்சியாக இருந்து வருகிறது. இதற்கு முந்தைய தலைமுறை பெரும்பாலும் பட்டன் ஃபோன்களை நம்பி இருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | Erode Election : "வாக்கை பெறுபவன் அல்ல.. வாக்கை அளிப்பவன்" - சாமியாரின் ஆன்மீக பேச்சு.! வீடியோ..
அத்தகைய போன்கள் இருந்தபோது சந்தையில் முதன்மையாக இருந்த பல நிறுவனங்களில் முதன்மையான நிறுவனம் நோக்கியா. இன்றும் ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக தங்களுடைய தயாரிப்புகளை புதுப்பித்துக் கொண்டு சந்தையில் ரீ எண்ட்ரி கொடுத்த நோக்கியா நிறுவனம் பல புதுப்புது போன் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
என்றாலும் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக நோக்கியா நிறுவனத்துக்கு ஒரு லோகோ அமைந்தது. மற்ற செல்போன் நிறுவனங்களில் லோகோ தனியாகவும் அந்த நிறுவனத்தின் பெயர் தனியாகவும் இருக்கும். நோக்கியா உள்ளிட்ட சில நிறுவனங்களில் நிறுவனத்தின் பெயரும் லோகோவும் ஒன்றுதான். குறிப்பிட்ட எழுத்துருவில் அமைந்த நிறுவனத்தின் பெயரே அந்நிறுவனத்தின் லோகோவாக விளங்கி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
அப்படி ஒரு நிறுவனமான நோக்கியா தற்போது கடந்த நிதியாண்டில் மட்டும் 2.11 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியதாக கூறப்படும் நிலையில் இந்த நிறுவனத்தின் லோகோ மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்த தகவல்கள் வைரலாகி வருகின்றன. வைரலாகி வரும் இந்த நிறுவனத்தின் புதிய லோகோவை பார்த்த பலரும் அட்டகாசமாக இருப்பதாக கூறி இதை பகிர்ந்து வருகின்றனர்.
Also Read | “ஹேப்பி பர்த்டே தாத்தானு சொல்லி.. அக்கறையுடன் ஃப்ரைடு ரைஸ் கொடுத்து..” - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி