ERODE ELECTION : "வாக்கை பெறுபவன் அல்ல.. வாக்கை அளிப்பவன்" - சாமியாரின் ஆன்மீக பேச்சு.! வீடியோ..
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா தனது 46 வயதில் உயிரிழந்தார்.
Also Read | "நான் பட்டபாடு இருக்கே".. குடி பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர்.. பலரையும் கவர்ந்த சம்பவம்!!
இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு அதிமுக (தமாகா) வேட்பாளர் யுவராஜாவை வென்றார்.
திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல், பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அதிமுக, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் சார்பில் கடந்த சில நாட்களாகவே அனல் பறக்கும் பிரச்சாரமும் நடைபெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து, தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகவும் பரபரப்பாக வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. மேலும் இதன் வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த மூத்த சாமியார் ஒருவரிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அந்த சாமியார், "மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களிக்கின்றனர். இன்னும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு இருக்கின்றனர். அதை பார்க்கும் பொழுது பெருமிதமாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் அதிகாரிகளாக நடந்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளாக நடந்து கொள்ள வேண்டும். ஆன்மீகவாதிகள் ஆன்மீகவாதிகளாக நடந்து கொள்ள வேண்டும்." என்று கூறினார்.
இறுதியில் பேசியவர், "நான் வாக்கை பெறுபவன் அல்ல. பல ஆண்டுகளாக மக்களுக்கு வாக்கை அளித்துக் கொண்டிருக்கிறேன். நான் வாக்கு அளிப்பவன்" என்று முத்தாய்ப்பாக முடித்தார்.