'போலீஸ் சுத்தி வளைச்சுட்டாங்கனு தெரிஞ்ச உடனே...' 'கடல்ல' வச்சு என்ன 'பண்ணினாரு' தெரியுமா...? - மெகுல் சோக்சி கைதான பின்னணி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரபல வைர வியாபாரிகள் நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி வரை கடன் பெற்று இந்தியாவை விட்டு தப்பித்து ஓடினர்.

இந்திய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் நிரவ் மோடி லண்டனில் சிறை வைக்கப்பட்டுள்ளார். ஆனால், கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் சோக்சி கடந்த 2018-ம் ஆண்டில், ஆன்டிகுவா நாட்டு குடியுரிமை பெற்று அங்கேயே தஞ்சம் அடைந்துள்ளார்
தற்போது வெளிநாட்டில் தலைமறைவான மெகுல் சோக்சி, டோமினிகா நாட்டில் இருப்பது தெரிய வந்தது. மெகுல் சோக்சி, டோமினிகா நாட்டில் போலீஸ் காவலில் சிறையில் உள்ள புகைப்படங்களும் ஊடகங்களில் வெளிவந்தது. அதில் அவர் ஆள் அடையாளம் தெரியாத வகையில் மெலிந்த தேகத்துடன் காணப்பட்டார்.
தற்போது, டொமினிக்கா நாட்டில் சி.ஐ.டி. போலீசாரால் மெகுல் சோக்சி எப்படி கைது செய்யப்பட்டார் என்ற விவரம் ஹாரி பேரன் என்பவர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், 'ரோசியாவ் பகுதியில் மெகுல் சோக்சி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலால் அவரை பிடிக்க சென்றுள்ளனர். போலீசாரை கண்ட மெகுல் சோக்சி அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். ஆனால், அவரால் நீண்ட தொலைவுக்கு செல்ல முடியவில்லை. செல்லும் வழியில் 2 முறை தவறி கீழே விழுந்துள்ளார்.
அதோடு தன்னிடம் இருந்த முக்கியமான ஆவணங்களை அவர் கரீபியன் கடலில் வீசியுள்ளார். அதன்பின் சில நிமிட போராட்டத்திற்கு பின் போலீசார் அவரை துரத்தி பிடித்தனர்.
கைது நடவடிக்கைக்கு பின்பே, இன்டர்போல் அவருக்கு ரெட்-கார்னர் நோட்டீஸ் வழங்கியதும், சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி என்பதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது' என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
