'இளமை' துள்ளலும், மகிழ்ச்சியுமாய் ... 'விருது' பெற்ற மூத்த வீராங்கனை ... செஞ்சுரி அடித்தும் 'தளராத' கால்கள் !
முகப்பு > செய்திகள் > இந்தியாநாரி சக்தி புரஸ்கர் விருதை சண்டிகரை சேர்ந்த 104 வயதான தடகள வீராங்கனை மான் கவுர் பெற்றுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு மத்திய அரசு சார்பில் 2019 ஆம் ஆண்டுக்கான 'நாரி சக்தி புரஸ்கர்' விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். விருதுடன் 2 லட்ச ருபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
விளையாட்டு துறை சார்பில் மூத்த தடகள வீராங்கனையான மான் கவுருக்கு (104) விருது வழங்கப்பட்டது. விருது வாங்க வேண்டி மேடைக்கு வந்த மான் கவுர், நூறு வயதை தாண்டிய ஆள் போல இல்லாமல் சற்று இளமையான ஆள் போல உற்சாகமாக வந்து விருதினை பெற்றுச் சென்றார். தனது 93 வது வயதில் தடகளத்தில் பங்கேற்க ஆரம்பித்த மான் கவுர், கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 20 பதக்கங்கள் வரை வென்றுள்ளார். இவரது மூத்த மகன் குர்தேவ் சிங் (82) தற்போது பயிற்சியாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
#WATCH 103-years-old Mann Kaur receives the 'Nari Shakti Puruskar' from the President, for her achievements in athletics. #Delhi #InternationalWomen'sDay pic.twitter.com/8NAADH0SJZ
— ANI (@ANI) March 8, 2020
