'முடிவை மறுபரிசீலனை பண்ணுங்க...' இந்த மாதிரி நிலைமைல 'அவர' விடுவிக்க முடியாது...! - பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பணியில் இருக்கும் நிலையில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளரான ஆலன் பந்தோபத்யாய் பதவி காலம் இன்றுடன் முடிகிறது.
பதவிக்காலம் நிறைவடையவுள்ள காரணத்தால் தில்லி உள்துறை அமைச்சகத்தில் ஆலன் பந்தோபத்யாய் ஆஜராக வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் பணி ஓய்வு பெறவிருக்கும் தலைமை செயலரை விடுவிக்க இயலாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், 'கொரோனா காலகட்டத்தில் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தலைமைச் செயலாளரை திரும்பப்பெறும் முடிவை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
புதிய தலைமைச் செயலரை நியமிப்பதற்கு பதிலாக அவருக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்' என முதல்வர் மமதா பானர்ஜி அனுமதி கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.