“டேபிள் டாப் ரன்வே?”... ‘இதுல விமானத்தை இயக்குவது அவ்ளோ ஈஸி இல்ல!’.. அப்படி என்ன இருக்கு??
முகப்பு > செய்திகள் > இந்தியாஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளான கோழிக்கோடு விமான நிலையம் Tabletop Runway கொண்டது எனப்படுகிறது என்றால் என்ன என்று விரிவாக பார்க்கலாம்.
விமான ஓடுதளம் உயரமான மலைக்குன்றின் மீது அமைந்து இருப்பதையே டேபிள் டாப் ரன்வே என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இதேபோல் ஓடுதளங்கள் கொண்ட விமான நிலையங்கள் உள்ளன. கோழிக்கோட்டை தவிர்த்து கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூர் விமான நிலையம் மற்றும் மிசோரமில் உள்ள விமான நிலையங்களிலும் கோழிக்கோடு போல் டேபிள் டாப் ரன்வேக்கள் உள்ளன.
இந்த உயரமான விமான நிலையம் இருக்கக்கூடிய பகுதியை சுற்றிலும் பள்ளத்தாக்குகள் அல்லது உயரம் குறைவான பகுதிகள் இருக்கின்றன. மிகவும் அனுபவம் வாய்ந்த விமானங்கள் மட்டுமே டேபிள் டாப் ஓடுதளங்களில் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது.
குறைந்த அளவு ஓடுதளத்தை மட்டுமே பயன்படுத்தி விமானத்தை தரையிறக்கவும், டேக் ஆஃப் செய்யவும் அனுபவம் வாய்ந்த விமானிகள் மட்டுமே இதுபோன்ற விமான நிலையங்களில் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.