கேரி பேக்குக்குலாமா காசு தரணும்...! - அப்படின்னு நினைக்குற ஷாப்பிங் லவ்வர்ஸ்க்கு அதிரடியான ஒரு குட் நியூஸ்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇனி ஷாப்பிங் மால்களிலும் கடைகளிலும் வாடிக்கையாளர்களிடம் கேரி பேக்குக்கு என தனியாக பணம் வசூலிக்க கூடாது என்று தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

பொதுவாக ஆடம்பர ஷாப்பிங் மால்களிலும், பிரபல கடைகளிலும் நாம் என்னதான் ஆயிரகணக்கில் பொருட்கள் வாங்கினாலும் அதை எடுத்து செல்ல தேவைப்படும் கேரி பேக்குகளுக்கும், பைகளுக்கும் எக்ஸ்ட்ரா பணம் காட்ட வேண்டிய தேவை இருக்கும். தற்போது அதற்கு முடிவுக்கட்டும் வகையும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதாவது பெரிய மால்களில் பொருட்களுக்கு பில் கொடுப்பர்களே தவிர பைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு, பொருட்கள் வாங்கும் மொத்த பில்லில் விபரங்களை தெரிவிப்பதில்லை. கேரி பேக்குகளுக்கு தனியாக பணம் வசூலிக்கப்படுகிறது.
இதனை எதிர்த்து டெல்லியை சேர்ந்த ஒருவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் பதிவு செய்த வழக்கில், 'குறிப்பிட்ட ஒரு தனியார் மாலில், கேரி பேக் கட்டணமாக ரூ.18 வசூலிக்கப்பட்டது. இதற்கான பில் தரவில்லை. அதனால், அந்த கேரி பேக் தரமுடையதா? இல்லையா? தயாரிப்பு விபரங்கள் போன்றவற்றை அறியமுடியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த வழக்கு மாவட்ட, மாநில நுகர்வோர் குறைதீர் மன்றங்களை தாண்டி, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணைத்திற்கு வந்து, மால் நிர்வாகம் மாநில, மாவட்ட குறைதீர்மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்து மேல் முறையீடு செய்தது. இவ்வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் தினேஷ்குமார், 'ஷாப்பிங் மால்கள் நுகர்வோரிடமிருந்து கேரி பைக்கு தனியாக பணம் வசூலிக்க கூடாது. பணம் செலுத்தி கவுண்டரில் கேரி பேக் வாங்கலாம். நுகர்வோர் கேரி பேக்கின் விலை, பையின் தரம் போன்றவற்றை அறிய உரிமை உள்ளது. கேரி பேக்குகள் பற்றிய தகவல்களை மாலின் நுழைவாயிலில் பொருத்தமான அடையாள பலகை மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். அதில் கேரி பேக்கின் தரம் மற்றும் விலையை வெளியிட வேண்டும்' எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
