பான் மசாலாவை சாலையில் துப்பிய நபர்.. முதன்முறையாக அபராதம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 29, 2019 05:10 PM

பான் மாசலாவை சாலையில் துப்பிய நபருக்கு, முதன்முறையாக இந்தியாவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

in a first ahmedabad man fined for spitting pan masala

நாட்டிலேயே தூய்மையான நகரங்களின் பட்டியலில் அகமதாபாத் இடம்பெற்றுள்ளது. கௌரவமான இந்த அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ள நகர நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக பொது இடங்களில் குப்பைக் கொட்டுவோர், எச்சில் துப்புவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் பான் மசாலா மென்று சாலையில் துப்பிய மகேஷ்குமார் என்ற நபருக்கு அகமதாபாத் நகர நிர்வாகம் நூறு ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அகமதாபாத்தின் நரோடா என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த, சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகமதாபாத் நகர நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அபராத நடவடிக்கை நாட்டிலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் கறைகள் ஏற்பட்டு தூய்மைப் பணியில் தொய்வு ஏற்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், 'பிரிட்டனில் லெய்சஸ்டர் என்னும் நகரில் குஜராத்தை சேர்ந்த இந்தியர்கள் பொது இடங்களில் பான் துப்புவது சுகாதாரமற்ற செயல். சமூகத்துக்கு எதிரான செயல். அவ்வாறு செய்பவர்களுக்கு £150, (இந்திய மதிப்பில் 13 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டு ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #AHMEDABAD #PAANMASALA #FINE