"எப்புடிங்க".. வலையில் சிக்கிய ராட்சத மீன்... மீனவருக்கு அடித்த ஜாக்பாட்.. விலை மட்டும் இவ்ளோ ரூபாய்க்கு போகுமா?!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடற்கரை அருகே நாம் நடந்து செல்லும் போது ஒருவிதமான புத்துணர்ச்சி நம்மில் பலருக்கும் நிச்சயம் உருவாகும். அதே வேளையில், அந்த கடல் நீருக்கு அடியிலும் நிறைய அற்புதமான விஷயங்களும் நிரம்பி கிடக்கத் தான் செய்கிறது.

Also Read | இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி.. வானத்தில் பறக்கும் வீரர்கள்.. சல்யூட் அடிக்க வைக்கும் வீடியோ..!
அவ்வப்போது இணையத்தில் கடலுக்கு அடியில் இருக்கும் நிறைய உயிரினங்கள் குறித்து ஆய்வாளர்கள் பல வியப்பான தகவல்களை வெளியிடுவதையும் நாம் பார்த்திருப்போம்.
அதே போல, பல மீனவர்கள் வலையிலும் அரிய வகை மீன் சிக்குவது குறித்து ஆச்சரியமூட்டும் செய்திகள் கூட அவ்வப்போது வலம் வருவதை நாம் கவனித்திருப்போம். இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு செய்தி குறித்த வீடியோ தான் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி பங்காரம்மா பாளையம் பகுதியில் உள்ள மீனவர்கள் வழக்கம் போல மீன் பிடிக்க கடலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் விரித்த வலையில், சுமார் 1500 கிலோ எடை கொண்ட திருக்கை இனமான மந்தா கதிர் மீன் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மிக மிக அரிய வகை மீன்களில் ஒன்றாக இந்த மைந்தா கதிர் மீன் உள்ள சூழலில், அழிந்து வரும் உயிரினங்கள் கீழ் இந்த மீன் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
அதே போல இந்த மீனின் விலையானது சுமார் 4 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், இந்த மந்தா கதிர் மீன் நிறைய மருத்துவ குணங்களுக்கும் உகந்ததாக இருப்பதாக தகவல்கள் சொல்கின்றது. இத்தனை லட்சம் மதிப்புள்ள அரிய மீன் வலையில் சிக்கி உள்ளது மீனவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த மீன் அதிக எடை கொண்டு இருப்பதால், கடற்கரைக்கு கொண்டு வர மீனவர்கள் பெரும்பாடு பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
Also Read | குட்டி யானை இல்ல.. இது 'சிட்டி' யானை.. பிரபல கோயிலில் கலக்கும் ரோபோ யானை..! இவ்ளோ எடையா.?
