'என்ன விட அழகா இருக்கியா நீ...!' நன்றாக 'அசந்து' தூங்கிக்கொண்டிருக்கும் போது... கணவன் செய்த அதிர்ச்சி காரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேசத்தில் மனைவி தன்னைவிட அழகாக இருப்பதால், அவரது முடியை வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்தவர் ஆரிப். இவரது மனைவி ரோஷ்னி. திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆன நிலையில் சமீபகாலமாக இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டையில் போய் முடிந்திருக்கிறது. ரோஷ்னிக்கு வெளியில் யாருடனோ தொடர்பு இருப்பதாக ஆரிப் சந்தேகப்பட்டு, அவரை தொடர்ந்து துன்புறுத்த தொடங்கியுள்ளார். ஒருகட்டத்தில் தன்னைவிட ரோஷ்னி அழகாக இருக்கக்கூடாது என்று தூங்கிக் கொண்டிருக்கும்போது அவரது தலைமுடியை வெட்டியுள்ளார். மேலும், அவரை ஒரு அறையில் வைத்து பூட்டி, வெளியே எங்கும் செல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை, தனது கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் வீட்டிலிருந்து நண்பர்கள் உதவியின் மூலமாக தப்பித்த ரோஷ்னி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தனது கணவர் எப்போதும் தன்னை சந்தேகிப்பதாகவும், அவ்வப்போது அடித்து துன்புறுத்துவதாகவும் ரோஷ்னி புகார் அளித்துள்ளார். மேலும், தலைமுடியை வெட்டினால் யாரும் தன்னை பார்க்க மாட்டார்கள் என்று ஆரிப் கூறியதாக தெரிவித்தார்.
ரோஷ்னியின் புகாரை அடுத்து, போலீஸார் ஆரிப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
