'இறந்துட்டார்னு உடம்ப தகனம்லாம் பண்ணினோமே...' '5 மாசம் கழிச்சு மனுஷன் கல்லு மாதிரி வந்து நிக்குறார்...' - உச்சக்கட்ட மர்மம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Sep 11, 2020 04:24 PM

குஜராத்தில் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டதாக நினைத்து இறுதி சடங்கு நடத்திய நபர் உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

gujarat person who was murdered and died has come alive

குஜராத் மாநிலம் ஆரவள்ளி மாவட்டத்தில் உள்ள கார்படா கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளியான ஈஸ்வர் மனத் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டு சகோதரர்களால் கொலை செய்யப்பட்டதாக கூறி குஜராத் காவல்துறையினரால் விசாரணை நடத்தப்பட்டது.

அதையடுத்து இறந்த ஈஸ்வர் மனத்தின் சடலம் மீட்கப்பட்டதாகவும், அவர் உடலின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டு கொலை என உறுதி செய்துள்ளனர் காவல்துறையினர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இரு சகோதர்களையும் துன்புறுத்தி குற்றத்தை ஒத்துக்கொள்ள செய்து, போலீசார் துணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்ற சம்பவங்கள் அனைத்தும் இறந்ததாக நினைத்த கூலி தொழிலாளி ஈஸ்வர் மனத் தற்போது வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த அவர் கொரோனா   ஊரடங்கால் தான் வீட்டிற்கு திரும்ப முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் விசாரணை நடத்திய காந்திநகர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அபய் சூடாசாமா மற்றும் இன்ஸ்பெக்டர் ஆர்.ஆர்.தபியாத்தை இடைநீக்கம் செய்து, விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிப்ரவரி மாதம் தகனம் செய்யப்பட்ட சடலத்தை இப்போது அடையாளம் காண வேண்டியிருக்கும் என்ற செய்தியும் போலீஸ் அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #SHOCK

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Gujarat person who was murdered and died has come alive | India News.