முதல்ல அமவுண்ட் 'கூகுள் பே'ல அனுப்புங்க...! 'எல்லாரும் அழகான பொண்ணுங்கதான், அவங்களே கால் பண்ணுவாங்க...' ஆன்லைன் ஆப் வழியாக மோசடி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 24, 2020 10:50 AM

ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலமாக பெண்களுடன் டேட்டிங் போக ஏற்பாடு செய்வதாக கூறி, ஏராளமானோரிடம் பணம் பெற்றுக்கொண்டு தொடர்ந்து ஏமாற்றி வந்த இளைஞரை, சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

Youth arrested for cheating with dating application

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர், மயிலாப்பூர் போலீசாரிடம் ஒரு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் locanto என்ற ஆப் மூலம் பெண்களுடன் டேட்டிங் செய்ய, ஒருவர் பணம் வசூலித்து ஏமாற்றியதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆப்பில் அழகான பெண்களின் புகைப்படத்தை மர்ம நபர் வெளியிட்டு, அவர்களுடன் நெருக்கமாக இருப்பதற்கு முன்பணத்தை Google pay மூலம் செலுத்துமாறு கூறியுள்ளார். அதனை நம்பி, பணம் செலுத்திய பின்னர், அந்த இளைஞரை பெண்கள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அப்போது தான், ஏமாற்றப்பட்டது தெரியவந்ததாக, அந்த இளைஞர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆன்லைனில் பணம் வசூலித்த மர்ம நபரிடம் அந்த இளைஞர்  கேட்டபோது, தன்மீது போலீசாரிடம் புகார் அளிப்பதாக, அவர் மிரட்டி வருவதாகவும், அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், Google pay-ல் பணம் கட்டிய நம்பரை வைத்து ஆய்வு செய்தபோது, திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை சேர்ந்த ரீகன் என்பவர், இவ்வாறு ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, பணகுடி சென்று ரீகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

அவரை சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, தீவிர விசாரணை மேற்கொண்ட போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அழகான பெண்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து டவுன்லோட் செய்து ஆப்பில் வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களுடன் டேட்டிங் போய் ஜாலியாக இருக்க வேண்டுமானால், முன்பணம் செலுத்த வேண்டும் எனக்கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

பலர் இவரின் மிரட்டலைக் கண்டு பயந்து, காவல்துறையில் புகார் அளிக்காமல் இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இவ்வாறு ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #DATINGAPP