‘காதலன் மீது ஆசிட் வீச்சு..’ இளம்பெண்ணின் செயலால் பரபரப்பு..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 17, 2019 10:48 AM

காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Delhi Girl threw acid on boyfriend for refusing to marry her

விகாஸ்பூரியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் இளம்பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் காயங்களுடன் சிகிச்சை பெற வந்துள்ளனர். சந்தேகமடைந்த போலீஸார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் காதலர்கள் என்பது தெரிய வந்துள்ளது. காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் காதலன் மீது ஆசிட் வீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆசிட் வீசியதில் அந்த இளைஞருக்கு முகம், கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணிற்கும் கைகளில் காயம் இருந்துள்ளது. போலீஸார் அந்தப் பெண்ணைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACIDATTACK