'கிரெடிட் கார்டு பத்திரம் பாஸ்'... 'இப்படி கூட அபேஸ் பண்ணலாம்'... அதிர்ச்சியில் பயனாளர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Jul 30, 2019 11:32 PM

அமெரிக்காவில் சுமார் 10 கோடி கிரெடிட் கார்டு பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A hacker gained access to 100 million Capital One credit card

கேபிடள் ஒன் என்ற கிரெடிட் கார்டு சேவை வழங்கும் நிறுவனம், அமெரிக்காவில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இதில் இருந்த தரவுகள் ஹேக் செய்யப்பட்டு,  கிரெடிட் கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இதில் கடந்த 2015 முதல் 2019 வரை உள்ள தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இதுவரை அமெரிக்காவை சேர்ந்த 10 கோடி பேர் மற்றும் கனடாவை சேர்ந்த 60 லட்சம் பேரின் விவரங்கள் அபேஸ் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த தகவல் திருட்டு கடந்த 19ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மென்பொறியாளர் பைஜ் தாம்ப்ஸன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அமேசான் வெப் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள கேபிடள் ஒன் நிறுவனம், தகவல்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறியுள்ளது.

Tags : #CAPITAL ONE #CREDIT CARD #HACKER #100 MILLION