'என்னை நோக்கி பாய்ந்த தோட்டா'.. ஆனா பர்ஸ்ல சிவன், சாய்பாபா எல்லாம் இருக்காங்க!'.. நூலிழையில் உயிர் தப்பிய 'காவலர்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 23, 2019 10:46 AM

உத்தரப்பிரதேசத்தின் நால்பந்த் பகுதியில் போராட்டக் காரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியுள்ளார்.

Bullet pierces cops vest during CAB Protest in uttarpradesh

உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களுள் இதுவரை 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  263 போலீஸார் காயமடைந்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட 4,500 பேரும் விடுவிக்கப்பட்டனர். இவர்களுள் 57 காவலர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் நால்பந்த் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை தடியடி நடத்திக் கலைத்தபோது, அங்கு காவலில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் விஜேந்திர குமாரின் புல்லட் வெஸ்டை ஒரு புல்லட் துளைத்தது.

ஆனால் பாக்கெட்டில் அவர் வைத்திருந்த பர்ஸால், தான் தப்பித்ததாகவும், இது தனது மறுபிறவிதான் என்றும் அவர் கூறியுள்ளார்.  அந்த பர்ஸில் 4 ஏடிஎம் கார்டுகள், சிவன், சாய்பாபா படங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருந்ததாக விஜேந்திர குமார் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #CABBILL #CABPROTESTS