'மனைவியை பார்சல் பண்ணி பெட்டிக்குள் அடைச்சிட்டு...' '2 நாளா ஜாலியாக இருந்த கணவன்...' 'மூணாவது நாள் அன்னைக்கு...' - உச்சகட்ட குரூரம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jul 08, 2020 01:29 PM

போபால் பகுதியில் கணவர் ஒருவர் குடிபோதையில் மனைவியை கொன்றுவிட்டு படுக்கைக்கு அடியில் ஒளித்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhopal Man killed wife and parcel the body in wooden box

போபால் நகருக்கு கிழக்கே 186 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சாகர் நகரில் மோட்டினகர் பகுதியில் 32 வயதான ஆர்டி அஹிர்வார் அவரது கணவர் ஷெர் சிங் அஹிர்வார் மற்றும் அவர்களது 10 வயது குழந்தையுடன், வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் ஷெர் சிங் அஹிர்வார் அவரது மனைவியை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன் காரணமாக  ஆர்டி சில காலம் தன் பிள்ளையுடன் பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் தான் தனது மகனை வெள்ளிக்கிழமை பெற்றோருடன் விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

மேலும் நேற்று ஷெர் சிங் நண்பர்களுடன் இருக்கையில் குடிபோதையில், தான் பக்கத்து வீட்டிலிருந்து கோடரியைக் கடன் வாங்கியதாகவும், ஒரு கொலையைப் பற்றியும் பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவரின் நண்பர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதையடுத்து போலீசார் ஷெர் சிங் வீட்டிற்கு வருகையில் துர்நாற்றம் வீசியுள்ளது. அதையடுத்து வீட்டை ஆராய்ந்ததில் அவரது கட்டிலின் கீழே இருக்கும் மரபலகையிலான அறையில் அழுகிய நிலையில் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஷெர் சிங் அஹிர்வாரை கைது செய்த போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர். 'குற்றம் சாட்டப்பட்ட ஷெர் சிங் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தன் மனைவியை குடும்ப பிரச்சனையின் காரணமாக மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் யாருக்கும் தெரியக்கூடாது என படுக்கைக்கு அடியில் இருக்கும் மர சேமிப்பு பெட்டியில் இரண்டு நாட்களாக பூட்டி வைத்து, எப்போதும் போல் சகஜமாக இருந்துள்ளார் 'என்று காவல்துறை அதிகாரிகள் தரப்பு கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 302 ன் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் பெண்ணின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bhopal Man killed wife and parcel the body in wooden box | India News.