'ஜூலை மாதம் இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது'... முழு விவரம் உள்ளே !

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jul 01, 2020 12:54 PM

ஜூலை மாதத்தில் வங்கிகளுக்குப் பல விடுமுறை நாட்கள் உள்ள நிலையில், அதன் முழு விவரம் தற்போது  வெளியாகியுள்ளது.

Here is the Complete List of Bank Holidays in Month of July

ஜூலை மாதத்திலும் வங்கிகளில் பல விடுமுறைகள் உள்ளன. ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு முக்கிய விடுமுறை 'பக்ரீத். இதுதவிர சில மாநிலங்களில் உள்ளூர் விடுமுறைகள் இருக்கும், அதில் வங்கிகளும் மூடப்படும். குறிப்பாக அரியானா மற்றும் பஞ்சாபில் ஹரியாலி டீஜ் தினத்தன்று - வங்கிகள் ஜூலை 23 அன்று மூடப்படும். மறுபுறம், ஜம்மு-காஷ்மீரில், குரு ஹர்கோபிந்தின் பிறந்த நாள் மற்றும் தியாகி தினத்தை முன்னிட்டு முறையே ஜூலை 5 மற்றும் ஜூலை 13 ஆகிய தேதிகளில் கூடுதல் விடுமுறைகள் இருக்கும்.

ஜூலை 5, 11, 12, 19, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும். அரியாலி டீஜ் தினத்தை முன்னிட்டு ஜூலை 23 ஆம் தேதி அரியானாவில் வங்கிகள் மூடப்படும்.

குரு ஹர்கோபிந்தின் பிறந்தநாளில் ஜூலை 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் வங்கிகளுக்கு விடுமுறை. மேலும் ஜூலை 17 ஆம் தேதி யு டிரோட் சிங் தினத்தை முன்னிட்டு மேகாலயாவில் வங்கிகள் இயங்காது. அதேபோன்று ஜூலை 6 ஆம் தேதி MHIP தினத்தை முன்னிட்டு மிசோரத்தில் வங்கிகள் செயல்படாது.

அரியாலி டீஜ் பண்டிகையையொட்டி ஜூலை 23 அன்று பஞ்சாபில் வங்கிகள் மூடப்படும். பானு ஜெயந்தியை முன்னிட்டு ஜூலை 13 ஆம் தேதி சிக்கிமில் வங்கிகள் இயங்காது. அதேபோன்று போனலு தினத்தன்று தெலுங்கானாவில் ஜூலை 16 ம் தேதி வங்கிகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Here is the Complete List of Bank Holidays in Month of July | India News.