"இத எப்படியாவது ராமர் கோயிலுக்கு அடியில... 2000 அடி ஆழத்துல புதைச்சிடுவோம்"..! அதிகாரிகள் அறிவிப்பு! என்ன இது? எதற்காக புதைக்கப்படுகிறது?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jul 27, 2020 03:49 PM

அயோத்தி, ராமர் கோயில் மற்றும் ராம ஜென்ம பூமியின் வரலாற்றை எதிர்கால சந்ததி அறிந்துகொள்ளும் வகையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு அடியில், 2000 அடி ஆழத்தில் 'டைம் கேப்சூல்' புதைக்கப்படும் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ayodhya ram janmabhoomi time capsule 2000 ft ram temple

டைம் கேப்சூல் புதைக்கப்படுவதால் எதிர்காலத்தில் ராம ஜென்ம பூமி குறித்து எந்தவித சர்ச்சையும் ஏற்படாமல் தடுக்கு முடியும் என்று கருதப்படுகிறது. முக்கியமான தகவல்களை எதிர்காலத் தேவைக்காகப் பாதுகாப்பதே டைம் கேப்சூல். தற்கால நிகழ்வுகள், தகவல்கள், வரலாற்றுக் குறிப்புகள், ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை எதிர்கால சந்ததியினரும் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில், எளிதில் உடையாத வலிமையான குடுவைக்குள் வைத்து புதைத்து வைத்துவிடுவார்கள். இதன்மூலம் நிகழ்கால தகவல்களை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள முடியும்.

2019 - ம் ஆண்டு நவம்பர் மாதம் 9 - ம் தேதி அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம். அத்துடன் இல்லாமல் மூன்று மாதத்துக்குள் ராமர் கோயில் கட்டுவதற்குரிய அறக்கட்டளையையும் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா எனும் அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்கியது. அயோத்தியில் ஆகஸ்ட்  5 - ம் தேதி பூமி பூஜை தொடங்குகிறது. அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சவுபால், "அயோத்தி வழக்கில் நடந்த சட்டப் போராட்டம் எதிர்காலத் தலைமுறையினருக்கு அறிந்து கொள்ள வேண்டும். அதனால், கோயிலுக்கு அடியில் பூமிக்குள் 2000 அடி ஆழத்தில் ராமர் கோயில் பற்றிய தகவல்கள் அடங்கிய டைம் கேப்சூலை வைக்கப்போகிறோம். கோயில் கட்டுமானத்துக்காக பல்வேறு புனிதமான இடங்களிலிருந்தும் மண் கொண்டுவரப்படும். மேலும், ராமர் தன் வாழ்க்கை பயணத்தில் சந்தித்த நதிகளிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு, பூஜைக்கு பயன்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ayodhya ram janmabhoomi time capsule 2000 ft ram temple | India News.