எனக்கு 'அந்த டிவி ஷோ' பார்க்கணும்...! 'ப்ரெயின் ஆப்பரேஷன் பண்றப்போ...' - பிரபல டிவி ஷோ, திரைப்படம் பார்த்த நோயாளி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமூளை அறுவை சிகிச்சை செய்யும் போது தனக்கு பிடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப சொல்லி பார்த்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திராவை சேர்ந்த 33 வயதான வரபிரசாத்திற்கு மூளையில் அறுவை சிகிச்சை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எப்போதும் மூளை அறுவை சிகிச்சையின் போது நோயாளி நினைவிழக்காமல் இருக்க அவர்களுக்கு பிடித்தமான ஒன்றை செய்ய சொல்வதும் பார்க்க சொல்வதும் வழக்கமான செயல்முறை.
இந்நிலையில் வரப்பிரசாத் தன் மூளை அறுவைசிகிச்சையின் போது லேப்டாப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்துள்ளார். பிக்பாஸ் மட்டுமில்லாமல் 2009-ல் வெளியான அவதார் திரைப்படத்தையும் பார்த்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள பிருந்தா நியூரோ சென்டரில் நடந்துள்ளது.
இதுபோல அறுவை சிகிச்சைகளின் போது நோயாளிகள் வயலின் வாசித்தது, உணவு சமைத்தது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
