'வாழ்க்கையில அடுத்தது என்ன செய்யப்போறோம்னு...' 'நம்பிக்கை இழந்து போய் நிற்க செய்த உத்தரக்காண்ட் வெள்ளப்பெருக்கு...' - நிலைகுலைந்து போன குடும்பத்திற்கு சோனு சூட் அளித்த நம்பிக்கை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரகாண்ட் மாநிலத்தில் ஜோஷிடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7-ஆம் தேதி அன்று திடீரென உடைந்ததால் பெரும் பனிச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
இதன்காரணமாக அலெக்நந்தா ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த பேரிடரில் பல சிக்கியவர்களை மீட்கும் பணிகளை ராணுவம், தேசிய-மாநில பேரிடர் மீட்புப்படை என பெரிய அளவில் மீட்புக்குழுவினர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரவு பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளப் பெருக்கில் தப்போவன் ஹைட்ரோபவர் திட்டத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த ஆலம் சிங் புண்டிர் என்பவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியானார். அவரின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த அவரது குடும்பம், அவரது மறைவால் மனைவி உட்பட நான்கு பெண் குழந்தைகளும் தடுமாறினர்.
இந்த நிலையில் தான், சோனுசூட்டிடம் சமூக வலைதளங்களில் வைத்த கோரிக்கையை ஏற்று உயிரிழந்த ஆலம் சிங்கின் அஞ்சல், அந்தரா,காஜல், அனன்யா ஆகிய நான்கு பெண் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றதோடு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக சோனு சூட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நடிகர் சோனு சூட் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இனி இந்தக் குடும்பம் என்னுடையது’ என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனா பேரிடரில் இருந்து தொடர்ச்சியாக எளிய மக்களுக்கு உதவும் சோனு சூட்டை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.