'20 வருஷம் கழிச்சு'... 'இரட்டை இலக்கத்தில் பெண் எம்எல்ஏக்கள்'... மாஸ் காட்டிய கேரளா!
முகப்பு > செய்திகள் > இந்தியாநடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 11 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கேரள சட்டப்பேரவையில் 20 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் 11 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 1996ஆம் ஆண்டு 13 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்ததே அதிகப்பட்ட எண்ணிக்கையாக இருந்தது. அதன்பிறகு தற்போது தான் அதிக எண்ணிக்கையில் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி சார்பில் 10 பெண் சட்டமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணி சார்பில் ஒரு பெண் எம்எல்ஏவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 140 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 103 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டதில் 11 பெண்களே சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைக்கின்றனர்.
2016-ம் ஆண்டில் 8 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் பெண்களுக்கு அதிகமான முன்னுரிமை அளிக்கப்பட்டதில் கூடுதலாக 3 பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக வந்துள்ளனர். காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் ஆதரவைப் பெற்ற வடகரையிலிருந்து போட்டியிட்ட கே.கே.ரேமா மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது தவிர இடதுசாரிகள் தரப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஷா மட்டணூர் தொகுதியில் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2-வது முறையாக வீணா ஜார்ஜ், சி.கே. ஆஷா, யு.பிரதிபா ஆகியோர் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.