மொத்தமே 3 பேருக்காக வடிவமைக்கப்பட்ட உலகின் காஸ்ட்லி ரோல்ஸ் ராய்ஸ்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகின் மிகவும் விலை உயர்ந்த காரை விரைவில் களமிறக்க இருக்கிறது பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ்.
Also Read | திடீரென மனைவி இறந்துவிட்டதாக சொன்ன கணவன்.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்..!
ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிஎம்டபிள்யூ (BMW) தான் இந்த உலக பிரசித்தி பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தையும் இயக்கி வருகிறது. இந்நிலையில் உலகின் மிகவும் விலையுயர்ந்த காரை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த காரை மொத்தமே மூன்று பேருக்கு மட்டுமே விற்பனை செய்ய இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
காஸ்ட்லியான கார்
உலகின் மிகவும் விலை உயர்ந்த கார் என்றதும் முழுவதும் டிஜிட்டல் மயமான கார் என நினைத்து விட வேண்டாம். இந்த காரில் எவ்வித டிஜிட்டல் சாதனங்களுக்கும் இடமில்லை. பொதுவாகவே ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் அதன் தனித்துவமான கைவினை வடிவமைப்பிற்கு பெயர் போனவை. அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் நிபுணர்கள் பார்த்து பார்த்து இந்த காரை டிசைன் செய்துள்ளனர். பார்ப்பதற்கு சொகுசு படகு போலவே இருக்கவேண்டும் என்பதற்காக இந்த நிபுணர்கள் அசாத்திய உழைப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஃபிரிட்ஜ்
கன்வெர்ட்டிபிள் எனப்படும் தேவைப்படும் நேரங்களில் மேற்கூரையை பயன்படுத்தும் வகையில் இந்த கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பாந்தோம் காரை போலவே இதிலும் 6.5 லிட்டர் V12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. காரின் பின்புறத்தில் ஒரு மினி சமையலறையே உருவாக்கியுள்ளனர் இந்த பலே வடிவமைப்பாளர்கள். இதனுள்ளே ஃபிரிட்ஜ் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தட்டு, ஸ்பூன், ஃபோர்க் என ஒரு மினி விருந்து ஏற்பாடு செய்யும் அளவிற்கு காரின் பின்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பின்புறத்தில் இன்னொரு அட்டகாச வடிவமைப்பும் உள்ளது.
பார்த்தவுடன் ட்ரங்க் போல காட்சியளிக்கும் இந்த மினி பிரிட்ஜ் செட்டப்-ன் மேலே பட்டாம்பூச்சிகள் போல இறக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஆன் செய்தவுடன் 67 டிகிரிக்கு பட்டாம்பூச்சி சிறகை விரிப்பது போல இது திறக்குமாம். மேலும் இதில் ஒரு அழகான குடை கொடுக்கப்பட்டுள்ளது. பிக்னிக் செல்லும் போது இந்த குடையின் கீழ் அமர்ந்து உணவுகளை உண்ண கார்பன் பைபரால் செய்யப்பட்ட சேர்களும் உள்ளேயே இருக்கின்றன.
கடிகாரம்
5.9 மீட்டர் நீளமுள்ள இந்த காரின் மற்றொரு சிறப்பம்சம் இதில் பொருத்தப்பட்டுள்ள கடிகாரம். இதை கையிலும் கட்டிக் கொள்ளலாம் அல்லது காரிலேயே வைத்து அழகு பார்க்கலாம். இந்த வாட்ச் மட்டுமே பல லட்சம் மதிப்பு உடையது என்கிறார்கள் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தார். அதேபோல இதனுள் 15 ஸ்பீக்கர்கள் மிகவும் விலை உயர்ந்த விளக்குகள் ஆகியவையும் இருக்கின்றன. தற்போதைய நிலையில் சாதாரண கார்களில் கூட ப்ளூடூத் போன்ற செல்போன் வழி இயக்க வசதி கொடுக்கப்படுகின்றன. ஆனால் இந்த உலகின் மிக விலை உயர்ந்த காரில் உங்களுடைய செல்போனை இணைத்துக் கொள்ள முடியாது. கிளாசிக் டிசைனில் அதே நேரத்தில் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஆடம்பரத்தில் உருவாக்கப்பட்டிருப்பது தான் இந்த ரோல்ஸ் ராய்ஸ் போட் டெய்ல் கார்.
விலை
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தால் முன்னர் தயாரிக்கப்பட்ட ஸ்வெப் டெய்ல் கார் தான் உலகின் மிகவும் விலை உயர்ந்த காராக கருதப்பட்டது. அதன்பிறகு, புக்காட்டி வெய்ரான் இந்த பட்டத்தை தட்டிச்செல்ல, தற்போது அந்த சாதனையை முறியடிக்க ரோல்ஸ் ராய்ஸ் இந்த காரை களமிறக்குகிறது. இதன் விலை 205 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பே கூறியதுபோல உலகில் 3 பேருக்கு மட்டுமே இந்த காரை விற்பனை செய்ய இருக்கிறது இந்த நிறுவனம்.
இந்த உலகின் மிகவும் காஸ்ட்லியான காரை வாங்க இருக்கும் அந்த 3 பேர் யார் என்பதுதான் இப்பொது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8