FAKE ஐடி ஆசாமி போட்ட கமெண்ட்.. "நாங்க இன்னும் இங்க தான் இருக்கோம்".. பக்குவமா பங்கம் செஞ்ச டிவிட்டர் CEO பராக் அகர்வால்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Selvakumar | Apr 28, 2022 03:22 PM

பிரபல சமூக வலைத் தளமான டிவிட்டரை உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் அந்த நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணிபுரிந்துவரும் பராக் அகர்வால் போட்ட ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Nope still here Twitter CEO Reply to user

Also Read | இது நம்ம லிஸ்டுலேயே இல்லையே.. மஸ்க் மார்க் வச்ச அடுத்த கம்பெனி.. பரபரப்பை கிளப்பிய ட்வீட்..

பராக் அகர்வால்

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் இந்தியாவை சேர்ந்த பராக் அகர்வால். முன்னதாக டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை மஸ்க் வாங்கியபோது அவரை நிர்வாக குழுவிற்கு வரவேற்பதாக அகர்வால் தெரிவித்திருந்தார். அதன்பிறகு டிவிட்டரை மஸ்க் முழுமையாக வாங்கிய பிறகு, அகர்வால் அதே பணியில் தொடர்வாரா என கேள்வி எழுந்தது.

Nope still here Twitter CEO Reply to user

இதனிடையே டிவிட்டர் ஊழியர் கூட்டத்தில் பராக் பேசுகையில்,"ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் கைமாறும் நிலையில் உள்ளதால் அது எந்தத் திசையில் செல்லும் என எங்களுக்குத் தெரியாது" எனத் தெரிவித்தாக தகவல் வெளியானது.

இழப்பீடு தொகை

இந்த பரபரப்புக்கு மத்தியில் ட்விட்டர் நிர்வாகத்தில் அடுத்து என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று Equilar நிறுவனம் ஆரூடம் சொல்லியுள்ளதாக கூறப்படும் தகவல்கள் வைரலாகி வருகின்றன. அதில் டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் ஒருவேளை பதவிநீக்கம் செய்யப்பட்டால், அவருக்கு நிறுவனம் இழப்பீடாக 42 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் 320 கோடி ரூபாய்) வழங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Fake ஐடி

இந்நிலையில் பராக் தனது டிவிட்டர் பக்கத்தில் "ட்விட்டரை சிறப்பாக மாற்றவும், சரியான முறையிலும், சேவையை வலுப்படுத்தவும் இந்த வேலையைச் செய்தேன். இரைச்சலை (டிவிட்டர்  கைமாறுவதை குறிப்பிட்டு) பொருட்படுத்தாமல் கவனத்துடனும் பொறுப்புடனும் பணியைத் தொடரும் நம் ஊழியர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Nope still here Twitter CEO Reply to user

இதில் Not பராக் அகர்வால் என்னும் Fake ஐடி ஆசாமி ஒருவர்,"எங்களை பணிநீக்கம் செய்வார்கள் என நினைத்தேன்" என கமெண்ட் போட்டிருக்கிறார். இந்த கமென்டிற்கு பதில் அளித்துள்ள நிஜ அகர்வால்,"இல்லை. இன்னும் இங்கே தான் இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Nope still here Twitter CEO Reply to user

Fake ஐடி ஒருவரின் கமென்டிற்கு டிவிட்டர் நிறுவனத்தின் CEO பராக் அகர்வால் போட்ட பதில் குறித்து தற்போது பலரும் வைரலாக பேசிவருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

Tags : #TWITTER CEO #NOPE STILL HERE #TWITTER CEO REPLY TO USER #FAKE ID #பராக் அகர்வால்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nope still here Twitter CEO Reply to user | Business News.