'புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை'... 'மறுபக்கம் சற்று நிம்மதி கொடுத்த தங்க விலை'... இன்றைய நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > வணிகம்சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாயைத் தொட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஆபரணத்தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
கொரோனா காரணமாக தொழில்துறை கடுமையான தேக்கத்தைச் சந்தித்த நிலையில், உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றிலிருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால் தங்க விலை கடுமையான ஏற்றத்தைச் சந்தித்துக் கொண்டே இருந்தது.
இந்நிலையில் தங்கம் விலையில் கடந்த வாரம் குறைவு காணப்பட்டு ரூ.36 ஆயிரத்துக்குக் கீழ் வந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.576 அதிகரித்தது மீண்டும் ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது. நேற்று ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 296 ஆகவும் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 537 ஆகவும் இருந்தது.
இன்று தங்கம் விலை சற்று குறைந்தது. சென்னையில் இன்று காலை தங்கம் பவுனுக்கு ரூ.36 ஆயிரத்து 224-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.4 ஆயிரத்து 528 ஆக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.74 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.60-க்கு விற்கிறது.