ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிறுவனம்.. காவல்துறைக்கு வந்த அதிரவைக்கும் போன்கால்.. கொஞ்ச நேரத்துல மொத்த கம்பெனியும் ஷாக் ஆகிடுச்சு..!
முகப்பு > செய்திகள் > வணிகம்அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்றின் மூத்த அதிகாரி தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அந்த நிறுவன ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குஸ்டாவோ அர்னால்
அமெரிக்காவில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் தலைமை நிதித்துறை அதிகாரியாக இருந்தவர் குஸ்டாவோ அர்னால். 52 வயதான இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தில் இணைந்திருக்கிறார். முன்னதாக பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் அர்னால். இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 16 ஆம் தேதி தற்போது பணிபுரியும் நிறுவனத்தின் 55,013 பங்குகளை அவர் விற்பனை செய்திருந்தார். இது தொழில்துறையில் பரபரப்பாக பேசப்பட்டது.
Credit : Mirror
பணிநீக்கம்
குறிப்பாக கடந்த வாரம் இந்த நிறுவனம் தனது 150 கடைகளை மூட இருப்பதாகவும், கணிசமான பணியாளர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இது அந்நிறுவன ஊழியர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு நியூயார்க் நகரில் உள்ள ஜெம்பா டவரில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கீழே விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர், கீழே விழுந்தவரின் உடலை பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே மரணமடைந்தது தெரியவந்திருக்கிறது.
விபரீதம்
இதனையடுத்து காவல்துறையினர் இது குறித்த விசாரணையில் இறங்கினர். அப்போது இறந்தது குஸ்டாவோ அர்னால் தான் என்பது தெரியவந்திருக்கிறது. கட்டிடத்தின் 18வது மாடியில் இருந்து அவர் விழுந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்களை பணிநீக்கம் செய்வது குறித்து அந்நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை நிதித்துறை அதிகாரியாக இருந்த குஸ்டாவோ அர்னால் உயிரிழந்த சம்பவம் பலரையும் உலுக்கியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Credit : Daily Mail
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.
Also Read | ஆஹா அடுத்து ஸ்டாண்ட் அப் காமெடி.. அதுவும் அவர்கூடயா..? எலான் மஸ்க் போட்ட பதிவு.. பத்திகிட்ட ட்விட்டர்..!