6000 சதவீதம்.. ராக்கெட் வேகத்துல எகிறிய ஷேர் மதிப்பு.. திக்குமுக்காடிப்போன ஊழியர்கள்.. ஆனா அடுத்தநாளே ஒன்னு நடந்துச்சு பாருங்க..!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Madhavan P | Aug 10, 2022 05:59 PM

ஹாங்காங்கை சேர்ந்த நிறுவனத்தின் பங்குகள், ஒரே நாளில் 6000 சதவீதம் உயர்ந்தது உலகம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வந்த நிலையில் அடுத்தநாளே அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது.

Bankers Turned Billionaires For An Instant Then Came 89 Percent Crash

Also Read | நெருங்கும் ட்விட்டர் வழக்கு.. எலான் மஸ்க் எடுத்த பரபர முடிவு.. மொத்த பங்கு சந்தையும் ஷாக் ஆகிடுச்சு..!

ராக்கெட் வேகம்

ஹாங்காங்கை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான மேஜிக் எம்பயர் குளோபல் லிமிடெட் அமெரிக்காவில் தன்னுடைய IPO வை வெளியிட்டிருந்தது. திங்கட்கிழமை காலை ஆச்சர்யம் தரும் வகையில் இந்த பங்கின் மதிப்பு 6,149 சதவீதம் உயர்ந்தது. இதனால் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒருகட்டத்தில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. இந்த நிறுவனத்தை துவங்கிய கில்பர்ட் சான் மற்றும் ஜான்சன் சென் ஆகியோர் முறையே $1.8 பில்லியன் மற்றும் $1.3 பில்லியன் மதிப்புள்ள பங்குகளைக் கொண்டிருந்தனர்.

Bankers Turned Billionaires For An Instant Then Came 89 Percent Crash

கில்பர்ட் சான் மற்றும் ஜான்சன் சென் ஆகிய இருவரும் மேஜிக் எம்பயர் குளோபல் லிமிடெட் நிறுவனத்தின் 63 சதவீத பங்குகளை கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இந்நிறுவனத்தின் பங்குகள் 89 சதவீத வீழ்ச்சியை சந்தித்தன. இதன் காரணமாக சானின் பங்கு இப்போது சுமார் $90 மில்லியன் டாலர்களாகவும் மற்றும் ஜான்சனின் மதிப்பு $65 மில்லியன் டாலர்களாகவும் குறைந்திருக்கிறது.

சரிவு

அமெரிக்க பங்குச் சந்தையில் தங்களது IPO வை களமிறக்கிய கொஞ்ச நேரத்திலேயே இந்நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்த நிலையில், அடுத்த நாளே மோசமான சரிவையும் சந்தித்திருக்கிறது. இந்நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டின் வருவாய் 17 சதவீதம் சரிந்து 2.2 மில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தங்களது IPO வை 4 டாலருக்கு இந்நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியது. செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சரிவுக்கு பிறகு அதன் தற்போதைய விலை 12.32 டாலராக இருக்கிறது.

Bankers Turned Billionaires For An Instant Then Came 89 Percent Crash

மேஜிக் எம்பயர் குளோபல் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மேனான சான், ஹாங்காங்கின் சீனப் பல்கலைக்கழகத்தில் அக்கவுண்டிங் படித்தவர். அதை தொடர்ந்து முன்னணி நிறுவனங்களில் நிதி துறையிலும் ஆடிட்டராகவும் பணிபுரிந்த பிறகு ஜான்சனுடன் இணைந்து கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை துவங்கினார்.

Also Read | அதிவேகமாக பயணித்த ரோலர் கோஸ்டர்.. கொஞ்ச நேரத்துல கேட்ட அலறல் சத்தம்.. மொத்த தீம் பார்க்கும் அதிர்ந்து போய்டுச்சு..!

Tags : #BANKERS #BILLIONAIRES #MAGIC EMPIRE GLOBAL LIMITED CRASH

மற்ற செய்திகள்