'இந்தியாவின் 4வது பெரிய குடும்ப நிறுவனம்'... 'மொத்த சொத்து மட்டும் '7.5 லட்சம் கோடி'... கிடுகிடுவென வளர்ச்சி!
முகப்பு > செய்திகள் > வணிகம்டாடா, ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமத்துக்கு அடுத்து நான்காவது பெரிய குடும்ப நிறுவனமாக வளர்ந்துள்ளது பஜாஜ் குழுமம்.
இந்தியாவில் குடும்ப நிறுவனங்களின் வளர்ச்சி என்பது அபரிவிதமாக உள்ளது. அந்த வகையில் பஜாஜ் குழுமத்தின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலராக (ரூ.7.5 லட்சம் கோடி) உயர்ந்திருக்கிறது. இது டாடா, ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமத்துக்கு அடுத்து நான்காவது பெரிய குடும்ப நிறுவனமாக பஜாஜ் குழுமம் உயர்ந்திருக்கிறது.
ஹெச்டிஎஃப்சி (HDFC) குழுமத்தின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலருக்கு மேல் இருந்தாலும், இது புரஃபஷனல்களால் நடத்தப்படும் நிறுவனம். ஆனால், மற்ற நான்கு நிறுவனங்களும் குடும்ப நிறுவனங்கள் ஆகும். அந்த வகையில் பஜாஜ் நிறுவனம் இந்த சிறப்பை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் எலெக்ட்ரிக்கல்ஸ், பஜாஜ் ஹிந்துஸ்தான் உள்ளிட்ட சில நிறுவனங்கள் உள்ளன.
இதில் பஜாஜ் ஹிந்துஸ்தான், முகுந்த் ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டு 100 சதவீதத்துக்கு உயர்ந்திருப்பது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதுவரை டாடா மற்றும் ரிலையன்ஸ் குழுமங்கள் மட்டுமே லிஸ்டில் இருந்தநிலையில், அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு இந்த ஆண்டில் நான்கு மடங்குக்கு மேல் உயர்ந்ததால் 100 பில்லியன் டாலர் குழுமமாக அதானி மாறியுள்ளது.