நாங்களும் 'அந்த மாதிரி' ராயல் என்ஃபீல்டுகளை 'தயாரிக்க' போறோம்...! - 'புல்லட்' பைக் பிரியர்களுக்கு 'அல்டிமேட்' தகவல்...!.!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலைக்கு பயந்து பலர் தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கும் முடிவுக்கு வந்துள்ளனர் என்றே கூறலாம்.

இதன் காரணமாக இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் சூழலை ஊகித்து சில காலங்களுக்கு முன்பே பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டுக்குள் நுழையத் தொடங்கியுள்ளனர்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை நிறுவனமான எய்ச்சர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் சித்தார்த்தா லால், தனது 2020-21 ஆண்டறிக்கையில் எலெக்ட்ரிக் வாகன பிரிவு வரும் காலங்களில் உத்வேகத்துடன் வளர்ச்சி பெறும் என கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த முயற்சியில் தற்போது சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராயல் என்ஃபீல்டு உலகளவில் மிகப்பழமையான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் புல்லட், கிளாசிக், ஹிமாலயன், இண்டர்செப்டார் 650, காண்டினண்டல் 650, மீட்டியார் 350 ஆகிய இருசக்கர வாகன மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இப்போது மார்க்கெட் நிலவரங்களுக்கேற்ப இந்திய மற்றும் சர்வதேச சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த செய்தி தொடர்பாக ராயல் என்ஃபீல்டு அதிகாரப்பூர்வமான தகவலாய் வெளிவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
