சந்தானம் - ஹர்பஜன் சிங் இணையும் படத்துக்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ஏ1'. இந்த படத்தை ஜான்சன் இயக்க, பிறகு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக டாரா அலிஷா பெர்ரி நடித்திருந்தார்.

Yuvan Shankar Raja is the composer of Santhanam and Harbhajan Singh's Dikkiloona

இதனையடுத்து சந்தானம் நடிக்கும் படம் டிக்கிலோனா. இந்த படத்தை கார்த்திக் யோகி எழுதி, இயக்கி வருகிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும்  சோல்ஜர் ஃபேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் கேஜேஆர் ஸ்டுடியோஸ், சோல்ஜர் ஃபேக்டரி, சந்தானம் குழுவுக்கு நன்றி. தலைவர், தல, தளபதி உருவாகிய பூமி, தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே உங்களால் வெள்ளித்திரையில். இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.