கம்முனு.. உம்முனு.. ஜம்முனு...! - ஜிவி பிரகாஷின் Bachelor போஸ்டரை வெளியிட்ட CSK சிங்கம் ஹர்பஜன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளியாகவிருக்கும் ”பேச்சிலர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

Harbhajan Singh Release The First look Of GV Prakash Bachelor

நடிகர் ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் உடன் இணைந்து நடித்து வெளியான படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. 'பிச்சைக்காரன்' படத்துக்கு பிறகு சசி இயக்கியுள்ள இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனையடுத்து ஜி.வி.பிரகாஷ் புதுமுக இயக்குநர் சுரேஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக தில்லி பாபு தயாரிக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் வெளியிட்டார். அந்த பதிவில் அவர் ”கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்..கமிட் ஆனா உம்முனு இருக்கனும்...Bachelorனா ஜம்முனு இருக்கலாம்.. #Bachelor First Look வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்த்துக்கள்!” என்று கூறியுள்ளார்.