KAAPAN USA OTHERS

முக்கிய இலக்கை அடைந்த தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்துக்கு பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

Thala Ajith, Yuvan Shankar Raja's Nerkonda Paarvai successfully 50 days

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்த இந்த படத்தில் ஷரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அபிராமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

விமர்சன ரீதியாக இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் இன்றோடு 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர், அஜித் ஆகியோர் தல 60 படத்தில் இணையவுள்ளனர்.