“ஹேமா இங்க தான் இருந்தாளாம்!”… கலாய்த்து தள்ளிய பாரதி கண்ணம்மா ‘அஞ்சலி’! #ViralVideo

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர்களில் முக்கியமான தொடர் பாரதி கண்ணம்மா.

where was hema Bharathi Kannamma Anjali viral fun video

நாளும் நாளும் அடுத்தடுத்த திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் அண்மைக் காலமாக ஹேமா, வெண்பாவால் கடத்தி வைக்கப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகி வந்தன. ஒருவழியாக கண்ணம்மா கடத்தல்காரர்களிடம் இருந்து ஹேமாவை மீட்டு விட்டார். எனினும் பாரதிக்கு, கண்ணம்மாவின் மீது இருக்கும் சந்தேகம் குறைந்தபாடில்லை.

இப்படி இந்த காட்சிகள் போய்க்கொண்டிருக்க, இதனிடையே பாரதியின் தம்பியான அகிலனின் மனைவியாக நடிக்கும் அஞ்சலி, ஹேமாவாக நடிக்கும் பிரபல சின்னத்திரை நட்சத்திரத்துடன் ஒரு ஜாலியான வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் பேசும் அஞ்சலி, “பாருங்கள்.. நாம் அனைவரும் காணாமல் போன ஹேமாவை வீடு, ரோடு, குப்பைத்தொட்டி, கார் என பல இடங்களில் தேடி வந்தோம்.

ஆனால் அவர் இத்தனை நாளாக எங்கே சென்றார் தெரியுமா? பக்கத்துவீட்டு பாய் வீட்டில் பிரியாணி சாப்பிட தான் சென்றாராம்” என்று கூறி ஹேமாவை கேட்க அவரும், “ஆமாம்.. பிரியாணி மிகவும் நன்றாக இருந்தது” என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பாரதி கண்ணம்மா ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இந்த சீரியலில் அஞ்சலி கர்ப்பமாக இருக்கிறார். அவரிடம் மருத்துவர் ஒரு முக்கியமான விஷயம் கூற வேண்டும் என்று மருத்துவமனைக்கு அழைத்து பேசவிருக்கிறார். இதனால் அஞ்சலி - அகிலன் வாழ்க்கையில் அடுத்து நடக்கும் திருப்பங்கள் என்ன என்கிற எதிர்பார்ப்பு ஒரு புறம் ரசிகர்களிடையே இருக்கிறது.

அஞ்சலியின் கணவராக நடிக்கும் அகிலன் என்னும் அகிலன் SPR, தற்போது இந்த சீரியல் மட்டுமல்லாமல், திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். ஆம், பிரபு தேவா நடித்திருக்கும் பகீரா படத்தில் நடித்திருக்கிறார் அகிலன். அத்துடன் விஷால் நடித்து வரும் #Vishal31 திரைப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் முழு படத்திலும் நடித்து வருகிறார்.

ALSO READ: "அம்மாவ பாக்கணும்!".. அடம் பிடித்த குழந்தைகள்!.. அம்மா இவங்களா?.. செந்தூரப் பூவே மாஸ் ப்ரோமோ!

“ஹேமா இங்க தான் இருந்தாளாம்!”… கலாய்த்து தள்ளிய பாரதி கண்ணம்மா ‘அஞ்சலி’! #VIRALVIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

where was hema Bharathi Kannamma Anjali viral fun video

People looking for online information on BarathiKannamma, BharathiKannamma, Hema, Trending, Venba, VijayTelevision will find this news story useful.