www.garudabazaar.com

"வெளிய வந்து பார்த்தா தான் தெரியுது.!".. எலிமினேட் ஆன VJ மகேஸ்வரி முதல் வீடியோ..! bigg boss 6 tamil

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

vj maheswari first video after elimination bigg boss 6 tamil

Also Read | LOVE TODAY பார்த்துட்டு சிம்பு அனுப்பிய வாழ்த்து.. நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பிரதீப்!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

vj maheswari first video after elimination bigg boss 6 tamil

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு கடந்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

vj maheswari first video after elimination bigg boss 6 tamil

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபேக்டரி டாஸ்க் நடக்கிறது. இதில் ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இனிப்பு கடைகளை வைத்திருக்கின்றனர். இவற்றுக்கான தயாரிப்பு பண்டங்களை வீட்டுக்குள் அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு என்று கலெக்ட் செய்துகொண்டு வருகின்றனர்.

vj maheswari first video after elimination bigg boss 6 tamil

இவர்களுள் மகேஸ்வரி பொருத்தவரை தொடக்கம் முதலே ஆக்டிவாக இருந்தார். கிச்சனில் பொறுப்புடன் சமைத்து வந்த இவர்,  ஆங்காங்கே சண்டைகள் சச்சரவுகள் தொடங்கி பிக் பாஸ் வீட்டில் தம்முடைய பங்களிப்பை கொடுக்கும் வகையிலும் இருப்பை காட்டும் வகையிலும் நடந்துள்ளார். அதே சமயம் சகப் போட்டியாளர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார். சகப் போட்டியாளர்களால் விமர்சிக்கவும் பட்டிருக்கிறார். பாராட்டவும் செய்யப்பட்டிருக்கிறார். இவர்தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.

vj maheswari first video after elimination bigg boss 6 tamil

இந்நிலையில் எலிமினேட் ஆகி வெளியே வந்துள்ள மகேஸ்வரி,  “நான் எலிமினேட் ஆனதில் வருத்தம் இல்லை. நான் என் விளையாட்டை விளையாடினேன்.. ஆனால் வெளியே வந்து பார்த்தால் தெரிகிறது நீங்கள் நிறைய அன்பை கொடுத்திருக்கிறீர்கள் என்பதெல்லாம். அதற்கு ரொம்ப நன்றி. தொடர்ந்து உங்கள் அன்பை தாருங்கள்.. நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read | நடிகர் கார்த்தியின் Facebook Page... கைவரிசை காட்டிய ஹேக்கர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

"வெளிய வந்து பார்த்தா தான் தெரியுது.!".. எலிமினேட் ஆன VJ மகேஸ்வரி முதல் வீடியோ..! BIGG BOSS 6 TAMIL வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

vj maheswari first video after elimination bigg boss 6 tamil

People looking for online information on Bigg boss 6 maheswari, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Maheswari elimination will find this news story useful.