www.garudabazaar.com

இந்த வாரம் பிக்பாஸில் எலிமினேட் ஆகப்போறது யாரு..? பரவும் தகவல்கள்.. Bigg Boss 6 Tamil

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

Bigg Boss tamil 6 which Contestant will eliminate this week

Also Read | உதயநிதி நடிப்பில் சைக்கோ-2 வருமா..? கலகத்தலைவன் விழாவில் போட்டுடைத்த மிஷ்கின்.!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள்  பங்கேற்றனர்.

Bigg Boss tamil 6 which Contestant will eliminate this week

பிக்பாஸ் நிகழ்ச்சி, அடுத்தடுத்து விறுவிறுப்பு நிறைந்த டாஸ்க்குகள் மற்றும் நிகழ்வுகளால் சென்று கொண்டிருக்கிறது. எப்போது எந்த சம்பவம் நடைபெறும் என்பதை சில நேரம் யூகிக்க முடியாத அளவுக்கு  பரபரப்பு சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறும். இதனால் ரசிகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை மிகவும் ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக நடிகர் ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.   இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அசல் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். கடந்த வாரம் ஷெரினா வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் எலிமினேசனில் உள்ள  கிரிக்கெட் வீரர் & மாடலான ராம், விஜே மகேஸ்வரி, கதிரவன் உள்ளிட்டோரில் யாராவது ஒருவர் எலிமினேட் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Bigg Boss tamil 6 which Contestant will eliminate this week

பிரபல மாடல் மற்றும் முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரரான ராம் பிக் பாஸ் வீட்டில் முதலில் சிறைக்குச் சென்றவர். அப்போது யாரும் கிடைக்காததால், தன்னை சிறைக்கு அனுப்பி விட்டதாக கமல்ஹாசன் முன்னிலையில் குறிப்பிட்டார்.

அதன் பிறகும் இரண்டாவது முறை ராம் பிக் பாஸ் வீட்டில் தம்முடைய பங்களிப்பு இல்லை என்கிற காரணத்தை குறிப்பிட்டு ஹவுஸ்மேட்களால் நாமினேஷன் செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

Bigg Boss tamil 6 which Contestant will eliminate this week

அதற்கு அடுத்த வாரத்தில் அவருக்கு கண் வலி வந்து விட்டது. எனினும் பாத்திரம் கழுவுவது, கிச்சனில் சமைப்பது உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபாட்டுடன் இருந்து வந்த ராம், கடைசியாக நடந்து வரும் ஃபேக்டரி டாஸ்கில் கொஞ்சம் ஆக்டிவ் ஆனார்.

மகேஸ்வரி பொருத்தவரை தொடக்கம் முதலே ஆக்டிவாக இருந்தார். கிச்சனில் பொறுப்புடன் சமைத்து வந்த இவர்,  ஆங்காங்கே சண்டைகள் சச்சரவுகள் தொடங்கி பிக் பாஸ் வீட்டில் தம்முடைய பங்களிப்பை கொடுக்கும் வகையிலும் இருப்பை காட்டும் வகையிலும் நடந்துள்ளார். அதே சமயம் சகப் போட்டியாளர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார். சகப் போட்டியாளர்களால் விமர்சிக்கவும் பட்டிருக்கிறார். பாராட்டவும் செய்யப்பட்டிருக்கிறார்.

Bigg Boss tamil 6 which Contestant will eliminate this week

கதிரவனை பொருத்தவரை தம்பி தானே விமர்சனங்கள் என எதையும் புன்னகையால் எதிர்கொள்பவர் என்று பெயர் பெற்றிருக்கிறார். டால் டாஸ்கில், முதல் ஆளாக டால் ஹவுஸுக்கு சென்று பொம்மையை வைத்ததும் இவர்தான். 

இந்த நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆகப்போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பினால், சனி & ஞாயிற்றுக் கிழமையில் கமல்ஹாசன் வருகை தரும் எபிசோட்கள் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.

Also Read | "மாமன்னன்ல உதய் Sir-க்கு லவ் சீன் இல்லை".. "அதிக நாள் ஷூட்டிங்".. மனம் திறந்த மாரி செல்வராஜ்!

இந்த வாரம் பிக்பாஸில் எலிமினேட் ஆகப்போறது யாரு..? பரவும் தகவல்கள்.. BIGG BOSS 6 TAMIL வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss tamil 6 which Contestant will eliminate this week

People looking for online information on Asal Kolar, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Eliminate Contestant, GP MUTHU, Shanthi, Sherina, Vijay Television, Vijay tv will find this news story useful.