Kaateri logo top
www.garudabazaar.com

ஒரு நாள் முன்கூட்டி ஆகஸ்ட் 11 அன்றே அமெரிக்காவில் ரிலீஸாகும் 'விருமன்'.. வெளியான OFFICIAL தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தின் அமெரிக்கா USA ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Viruman Movie USA Premier Show on August 11 Prime Media

Also Read | விருமன் படத்தின் “மதுரை வீரன்" பாடல் வீடியோ ப்ரோமோ.. அதிதி ஷங்கரின் அசத்தல் டான்ஸ் & VOICE!

சூர்யா-ஜோதிகாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் கார்த்தி 'விருமன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அமெரிக்கா ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனமான பிரைம் மீடியா நிறுவனம்  கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் ஒரு நாள் முன்கூட்டியே அமெரிக்க நேரப்படி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வியாழக்கிழமை அமெரிக்க திரையரங்குகளில் வெளியாகும் என பிரைம் மீடியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Viruman Movie USA Premier Show on August 11 Prime Media

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை மாநகரில் நடத்த படக்குழு திட்டமிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நாளை ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி இந்த இசை வெளியீட்டு விழா நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றே படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Viruman Movie USA Premier Show on August 11 Prime Media

இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கி முடித்துள்ளார்.

Viruman Movie USA Premier Show on August 11 Prime Media

நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Also Read | அடடே..கார்த்தி நடிக்கும் 'விருமன்'.. கேரளா ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல முன்னணி நிறுவனம்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Viruman Movie USA Premier Show on August 11 Prime Media

People looking for online information on Karthi, Viruman, Viruman Movie, Viruman Movie USA Premier Show will find this news story useful.