www.garudabazaar.com

கார்த்தி நடிக்கும் 'விருமன்' படத்தின் வெளியான புதிய ரிலீஸ் தேதி! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் உருவான ‘விருமன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Karthi Viruman Movie New Release Date August 12

Also Read | இன்ஸ்டாகிராமில் கோரிக்கை வைத்த ரசிகர்.. Unseen போட்டோவை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்!

வசூல் சாதனை படைத்த கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி விருமன்’ திரைப்படத்தில் மீண்டும் இணைந்தார்.

நடிகர் கார்த்தி  ‘பருத்திவீரன்’ திரைப்படத்திற்கு பிறகு கிராமத்து இளைஞனாக, நடித்த படம் ‘கொம்பன்’.  இயக்குநர் முத்தையா இயக்கத்தில், குடும்ப உறவுகளின் பெருமை சொல்லும் படமாக, சிறப்பான கிராமத்து பின்னணியில் உருவான அப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

தற்போது இந்த வெற்றி கூட்டணி மீண்டும் விருமன் படம் மூலம் இணைந்தது.

Karthi Viruman Movie New Release Date August 12

முன்னதாக மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இந்த படத்தின் படபிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் 21ம் தேதி முடிவடைந்தது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரை மாநகரில் நடத்த படக்குழு திட்டமிட்டு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மதுரை மாநகரின் மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி இந்த இசை வெளியீட்டு விழா நடக்கும் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Karthi Viruman Movie New Release Date August 12

இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். ‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கி முடித்துள்ளார்.

நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகி வருகிறது.

Karthi Viruman Movie New Release Date August 12

விநாயகர் சதுர்த்தி அன்று ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் முன்கூட்டியே ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக தற்போது புதிய போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி ரிலீஸ் செய்ய உள்ளது.

Also Read | "பழைய யுவன் வேணும்".. லவ் டுடே படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வீடியோ.. யுவனின் நச் காமெடி!

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Viruman Movie New Release Date August 12

People looking for online information on Karthi, Karthi viruman movie, Viruman Movie, Viruman Movie Release updates will find this news story useful.