www.garudabazaar.com

விக்ரம் நடிக்கும் 'தங்கலான்'.. KGF-ல் ஷூட்டிங் குறித்து பா‌. ரஞ்சித் கொடுத்த செம்ம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Vikram Thangalaan Movie Shooting Update From Pa Ranjith

Also Read | VIDEO: "வாரிசு படத்தில் இந்த ROLE-ல தான் நடிக்கிறோம்".. மனம் திறந்த குட்டீஸ் ஹர்சிதா & அத்வைத்

"நட்சத்திரம் நகர்கிறது" படத்தைத் தொடர்ந்து, விக்ரமை வைத்து 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

Vikram Thangalaan Movie Shooting Update From Pa Ranjith

இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது.

Vikram Thangalaan Movie Shooting Update From Pa Ranjith

இந்நிலையில் மார்கழியில் மக்களிசை நிகழ்வில் கலந்து கொண்ட பா‌. ரஞ்சித் தங்கலான் படத்தின் அப்டேட் குறித்த தகவலை பகிர்ந்தார். "தங்கலான் நல்லா வந்துட்டு இருக்கு. சமீபத்தில் கோலார் தங்க வயலில் படப்பிடிப்பு நடந்தது. ஜனவரியில் அடுத்த கட்ட படப்பிடிப்பு  நடக்கும். படம் சிறப்பாக வரும்" என்று பா‌. ரஞ்சித் கூறினார்.

Also Read | துணிவு படத்தில் பட்டிமன்றம் மோகன சுந்தரம்.. வெளியான கேரக்டர் லுக் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Thangalaan Movie Shooting Update From Pa Ranjith

People looking for online information on Pa Ranjith, Thangalaan, Thangalaan Movie Shooting Update, Vikram, Vikram Thangalaan Movie will find this news story useful.