LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

PS1 பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங்.. வெளியான ஆதித்த கரிகாலன் விக்ரமின் தெறி மாஸ் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங் BTS வீடியோ வெளியாகி உள்ளது.‌

Vikram Ponniyin Selvan Movie Chola Chola Song Making Video

Also Read | PHOTOS: பூஜையுடன் துவங்கிய இந்தியன் 2.. படத்தில் இணைந்த பிரபல டாப் ஒளிப்பதிவாளர்! இவரா?

எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை  இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். ஏ.‌ ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

Vikram Ponniyin Selvan Movie Chola Chola Song Making Video

ஏற்கனவே இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளன.‌ பொன்னி நதி மற்றும் சோழா சோழா ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

Vikram Ponniyin Selvan Movie Chola Chola Song Making Video

ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.  

Vikram Ponniyin Selvan Movie Chola Chola Song Making Video

இந்நிலையில் இந்த படத்தின் சோழா சோழா பாடலின் புதிய மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்கு விக்ரம் நடனம் ஆடும் வீடியோவில் இயக்குனர் மணிரத்னம் தோன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பிருந்தா மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

Also Read | "விக்ரம் வேதா" படத்தின் இந்தி ரீமேக்.. ரிலீஸ் தேதியுடன் வெளியான மாஸ் FIRST LOOK போஸ்டர்கள்!

PS1 பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங்.. வெளியான ஆதித்த கரிகாலன் விக்ரமின் தெறி மாஸ் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Ponniyin Selvan Movie Chola Chola Song Making Video

People looking for online information on Ponniyin Selvan Movie Chola Chola Song, Ponniyin Selvan part 1, Vikram, Vikram Ponniyin Selvan Movie will find this news story useful.