LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

"KGF-ல யாஷ்க்கு பதிலா நான் நடிச்சிருக்கணும்!" - ஸ்ரீநிதி குறித்து விக்ரம் கலகல பேச்சு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் விக்ரம் நடித்துள்ளார்.

i should have acted with srinidhi shetty in kgf Says Vikram

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்திற்காக ரசிகர்களை சந்திக்கும் விதமாக நடிகர் விக்ரம் தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு அங்கமாக திருச்சி தெப்பக்குளம் செயிண்ட் ஜோசப் கல்லூரி நிகழ்வில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு பேசினார்.

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விக்ரம்,  “இந்த படத்தில் என்னுடன் மீனாட்சி நடித்துள்ளார். கல்லூரி படிக்கும் ஒரு சிறிய பெண்ணாக வருகை தருவதுடன், கதையின் முன்னேற்றத்துக்கு புதிய புதிய யோசனைகளை கொண்டுவரும் கதாபாத்திரமாக நடித்துள்ளார். மிருணாளினி பற்றி சொல்ல வேண்டுமென்றால், காதல் பண்ணும் நாயகிதான்.. அதே சமயம் இந்த படத்தில் நடக்கும் நிறைய விஷயங்கள் அவரால் தான் நடக்கும். மிகவும் நன்றாக நடித்துள்ளார். பாடலில் இன்னும் நல்லாவே பண்ணிருக்கார்.

அதேபோல் கேஜிஎஃபில் நடித்து கலக்கியவர் ஸ்ரீநிதி. நான் பணிபுரிந்ததில் மிகவும் இனிமையான, திறமை, கடின உழைப்பு மற்றும் ஒழுக்கம் நிறைந்தவர். கல்லூரி படிக்கும்போது கேஜிஎஃப் பார்த்தேன். அப்போது ஸ்ரீநிதியுடன் கேஜிஎஃபில் யாஷ் நடிப்பதற்கு பதிலாக நான் நடித்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்.  (சிரிக்கிறார்).

ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், அவர் சின்ன வயதில் அந்நியன் படம் பார்த்துவிட்டு அதில் சதாவுக்கு பதிலாக தான் நடிச்சிருக்கணும் என கூறினார், அதற்கு கவுண்ட்டராகவே நான் இதை கூறினேன்.” என கலகலவென பேசினார்.

தொடர்புடைய இணைப்புகள்

i should have acted with srinidhi shetty in kgf Says Vikram

People looking for online information on Ajay Gnanamuthu, Cobra, KGF, Srinidhi Shetty, Vikram will find this news story useful.