ஆண்டவர் ஆடுறார் ஒத்திக்கோ.. "விக்ரம்" படத்தின் முதல் சிங்கிள்.. அனிருத்தின் அடுத்த மரண மாஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீசாகி உள்ளது.

Vikram Movie Pathala Pathala Single Song Released

Also Read | BREAKING: விக்ரமின் கோப்ரா ரிலீஸ் தேதி இதுவா..? சம்பவம் Confirm-னா இத்தன நாள் லீவு இருக்கு..!

"விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், முன்னோட்ட வீடியோ, மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

Vikram Movie Pathala Pathala Single Song Released

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பாடல், இன்று மே 11 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியாகியுள்ளது. 6.30 மணிக்கே ஐ டியூன்ஸில் இந்த பாடல் வெளியாகி விட்டது.

Vikram Movie Pathala Pathala Single Song Released

'பத்தல பத்தல' என தொடங்கும் இந்த பாடலை கமல் எழுதி பாடியுள்ளார். இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இதற்க்கான இறுதி ஒலிப்பதிவு சில தினங்களுக்கு முன் அனிருத் ஸ்டூடியோவில் நடந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை வட்டார மொழியில் இந்த பாடல் அமைந்துள்ளது. பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா MBBS படங்களில் உள்ள பாடல் போல அமைந்துள்ளது. பறை இசை பிரதானமாக இடம் பெற்றுள்ளது.

"கஜானாலே காசில்லே..கல்லாலையும் காசில்லே..காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே...சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே" என்ற பாடல் வரிகள் பாட்டில் இடம் பெற்றுள்ளன.

Vikram Movie Pathala Pathala Single Song Released

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு வரும் மே 15 ஆம் தேதி, ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vikram Movie Pathala Pathala Single Song Released

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

ஆண்டவர் ஆடுறார் ஒத்திக்கோ.. "விக்ரம்" படத்தின் முதல் சிங்கிள்.. அனிருத்தின் அடுத்த மரண மாஸ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Movie Pathala Pathala Single Song Released

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Lokesh Kanagaraj, Pathala Pathala Single Song, Vijay Sethupathi, Vikram Movie will find this news story useful.