www.garudabazaar.com

விஜய் படங்களுக்கு கிடைத்த செம ரீச்.! தளபதி ஹிந்தி, தெலுங்கிலும் சொல்லி அடிக்கும் கில்லிதான்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் படங்களுக்கு கடந்த வாரம் ஹிந்தி, தெலுங்கு சானல்களில் செம ரீச் கிடைத்துள்ளது. 

ஹிந்தி, தெலுங்கில் கலக்கும் விஜய் படங்கள் | vijay's bigil and bairavaa impressions in tv channels

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் விஜய். இவர் நடித்த தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் விஜய் படங்களுக்கு கடந்த வாரம் ஹிந்தி, தெலுங்கு சானல்களில் கிடைத்துள்ள ரெஸ்பான்ஸ் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. விஜய்யின் பைரவா படத்தின் ஹிந்தி டப்பிங் 42,73,000 பதிவுகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது. அதே போல பிகில் படத்தின் தெலுங்கு டப்பிங் 57,15,000 பதிவுகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தமிழ் சானல்கள் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு சானல்களிலும் விஜய்யின் படங்களுக்கு செம ரெஸ்பான்ஸ் இருப்பது இதன் மூலம் தெரிகிறது. 

 

Entertainment sub editor