குக் வித் கோமாளியை தொடர்ந்து முடிவுக்கு வந்த பிரபல ரியாலிட்டி ஷோ... சோகத்தில் ரசிகர்கள்...!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிகழ்ச்சி வாராவாரம் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. அதிலும் பலரைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் பிம்பமே இந்த சீசன் 2 மூலமாக மாறியுள்ளது. சீரியஸான மனிதர்களாக இருப்பார்கள் என்று நினைத்த பலரும் மிகவும் எளிமையான, சுவாரசியமான, ரசிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கோமாளிகள் உடன் போட்டியாளர்கள் பழகும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.
![vijay tv popualr reality show to end soon முடிவுக்கு வந்த பிரபல ரியாலிட்டி ஷோ vijay tv popualr reality show to end soon முடிவுக்கு வந்த பிரபல ரியாலிட்டி ஷோ](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vijay-tv-popualr-reality-show-to-end-soon-photos-pictures-stills.jpg)
குக் வித் கோமாளி சீசன் 2 தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி 4 மணி நேர தொடர் ஒளிபரப்பாக இந்நிகழ்ச்சியின் பைனல்ஸ ஒளிபரப்பப்பட்டது. மேலும் ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு, சந்தோஷ் நாராயணன், அறிவு, தீ உட்பட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மக்களும் குக் வித் கோமாளி சீசன் முடிந்து விட்டதே என்ற சோகத்தில் தான் இருக்கின்றனர். அடுத்த சீசனுக்காக ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக மக்கள் வாராவாரம் எதிர்பார்த்துக் பார்த்துக் கொண்டிருந்த பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ஸ்டார்ட் மியூசிக். பிரியங்காவை தொகுப்பாளராக வைத்து நடந்து வரும் இந்த நிகழ்ச்சியின் சீசன் 2, ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது. இப்போது, இந்நிகழ்ச்சி அதன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிவிப்பது போல் தெரிகிறது, தொகுப்பாளர் பிரியங்கா ஒரு உணர்ச்சிகரமான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த செய்தியும் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Another Popular Reality Show Ends Post Cook With Comali 2 In Vijay TV Ft Start Music 2; Viral Video
- Baba Bhaskar And Kani In Start Music பாபா பாஸ்கர், கனி நடுவில் வாக்குவாதம்
- Heated Argument Between Cook With Comali 2 Kani And Baba Bhaskar Starts? Viral Promo Ft Start Music
- Late Actress Chitra's Last Start Music Show Appearance With Pandian Stores Family; Viral Video