www.garudabazaar.com
iTechUS

தளபதி 67 படத்தின் பூஜை.. கலந்து கொண்ட தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள்..! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் & லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ வெளியாகி உள்ளது.

Vijay Trisha Lokesh Thalapathy 67 Movie Pooja Video

                      Images are subject to © copyright to their respective owners.

Also Read | "கணவருடன் இந்த ஆண்டின் முதல் பதிவு".. பிரபல வெளிநாட்டில் பஹத் & நஸ்ரியா சுற்றுலா..!

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க உள்ளது.

Vijay Trisha Lokesh Thalapathy 67 Movie Pooja Video

Images are subject to © copyright to their respective owners.

ராக்ஸ்டார் அனிருத், தளபதி 67 படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

Vijay Trisha Lokesh Thalapathy 67 Movie Pooja Video

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

Vijay Trisha Lokesh Thalapathy 67 Movie Pooja Video

Images are subject to © copyright to their respective owners.

நேற்று முன்தினம் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை படநிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பூஜையில் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் விஜய், த்ரிஷா, அர்ஜூன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் படத்தின் தயாரிப்பாளர் லலித் & இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் ஆனந்த், விஜய் மேனேஜரும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷூம் கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான அயலான் இயக்குனர் ரவிக்குமார், புஷ்கர், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.

Also Read | நெய்லுக்கு ஒரு ஃபிரண்ட் கிடைச்சாச்சு 😍.. அட்லி & பிரியாவுக்கு வாழ்த்து கூறிய காஜல் அகர்வால்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Trisha Lokesh Thalapathy 67 Movie Pooja Video

People looking for online information on Thalapathy 67, Thalapathy 67 Movie Pooja, Trisha Krishnan, Vijay will find this news story useful.