'பேட்ட' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்பாரில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இணைந்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை படங்களின் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கை ஜீவாவின் புகைப்படத்தை பகிர்ந்த அவர், ''தர்மதுரை படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் நடிகையாக அறிமுகமாகி பல குறும்படங்களில் நடித்து விருதுகள் பெற்று இன்று சூப்பர் ஸ்டார் தியானி ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் சகோதரி திருநங்கையர் ஜீவா அவர்களுக்கு வாழ்த்துகள்'' என்றார்.
அதற்கு பதிலளித்துள்ள ஜீவா, நன்றி சார் எல்லாம் நீங்கள் தந்த வாழ்க்கை சார். என்று பதிலளித்துள்ளார்.
தர்மதுரை படத்தில் மக்கள் செல்வன் @VijaySethuOffl யுடன் நடிகையாக அறிமுகமாகி பல குறும்படங்களில் நடித்து விருதுகள் பெற்று
இன்று சூப்பர் ஸ்டார் தியானி @rajinikanth அவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் சகோதரி #திருநங்கையர்ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் pic.twitter.com/5bDy5BEGwq
— Seenu Ramasamy (@seenuramasamy) June 23, 2019