விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'சிந்துபாத்' திரைப்படம் தற்போது ஜூன் 21 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை அருண் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதனையடுத்து விஜய் சேதுபதி ஒரு படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
விஷ்ணு விஷாலின் 18 ஆவது படமான இந்த படத்தை சஞ்சீவ் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை ஆனந்த் ஜாய் தயாரிக்கவுள்ளார்.
Very happy to announce the details of #VV18 with my bestie @vikranth_offl
Script Penned by d super @VijaySethuOffl & Directed by @Dir_sanjeev
A dream to work in @thisisysr Musical
Thank u @SujataaE @anandjoy006 to have made this happen:)🙏Need all ur blessings:) @onlynikil pic.twitter.com/aLWTLMBZki
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) June 20, 2019