தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத் தேர்தல், பொதுத் தேர்தலை மிஞ்சிய பரபரப்பை பெற்றிருக்கிறது. விஷால்- நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் ஒரு தரப்பாகவும், பாக்யராஜ்- ஐசரி கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் மற்றொரு தரப்பாகவும் மல்லுக்கட்டுகிறார்கள்.
சென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் ஜூன் 23-ம் தேதி (திங்கட்கிழமை) இந்தத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே தமிழக அரசின் பதிவுத்துறை அதிரடியாக களத்தில் குதித்து, ‘நடிகர் சங்க கணக்கு வழக்குகள் சம்பந்தமாக குளறுபடிகள் இருக்கின்றன. எனவே தேர்தலை நடத்தக் கூடாது’ என உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஷால் சென்னை உயர் நீதிமன்றக் கதவைத் தட்டினார். அந்த வழக்கில் தேர்தலை நடத்த அனுமதி அளித்து நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
எனவே திட்டமிட்டபடி எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் திங்கட்கிழமை (ஜூன் 23) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள், நாடக நடிகர்கள் நேரில் வந்து வாக்களிக்க இருக்கிறார்கள். வெளியூரில் இருப்பவர்கள் தபால் மூலமாக வாக்களிக்க இருக்கிறார்கள்.
நடிகர் சங்க வாக்குப் பதிவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என விஷால் ஏற்கனவே சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளித்தார். இதற்கிடையே இரு தரப்பும் வெளிநபர்களை தேர்தல் நடைபெறும் இடத்தில் குவிக்க இருப்பதாக பரஸ்பரம் புகார் வாசிக்கிறார்கள்.
சென்னையில் இன்று பாக்யராஜ் தலைமையில் செய்தியாளர்களை சந்தித்த சுவாமி சங்கரதாஸ் அணியினர் இதை வெளிப்படையான புகாராகவே கூறினர். அத்துடன், தபால் வாக்குப் போடவிருக்கும் பலருக்கும் இன்னமும் வாக்குச்சீட்டு போய்ச் சேரவில்லை என கூறினர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கான தபால் வாக்குச் சீட்டை கேட்டுக்கொண்டிருப்பதாகவும், இன்னும் அவருக்கு போய்ச் சேரவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
தற்போது ரஜினி இந்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் நான் இப்பொழுது மும்பையில் படப்பிடிப்பில் இருக்கிறேன் தபால் சீட்டு தாமதமாக கிடைத்ததால் வாக்களிக்க இயலவில்லை இதை எண்ணி மிகவும் வருந்துகிறேன் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்
— Rajinikanth (@rajinikanth) June 22, 2019