www.garudabazaar.com

‘விஜய் சேதுபதி’.. ஒரு ஸ்பெஷல் கேரக்டரில்.. ‘சந்தீப் கிஷன்’ படத்துலயா?! .. டைட்டில் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் 'மைக்கேல்' என பெயரிடப்பட்டிருக்கும் புதிய படத்தை நாராயண் தாஸ் கே. நரங் வழங்குகிறார். இப்படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

vijay sethupathi Sundeep Kishan team up ranjith jeyakodi michael

விஜய் சேதுபதி நடித்த 'புரியாத புதிர்', ஹரீஷ் கல்யாண் நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' மற்றும் விரைவில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'மைக்கேல்'. இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார்.

ஆக்ஷன் என்டர்டெய்னர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது. இதில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிகிறது.

இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்  மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் தயாரிக்க, நாராயண் தாஸ் கே.நரங் வழங்குகிறார். இந்த நிறுவனம் தற்போது இயக்குனர் சேகர் கம்முலா மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில், தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் தயாராகும் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன் ஆகிய இருவரும் முதன் முறையாக 'மைக்கேல்' எனும் இந்த படத்தில் இணைந்திருப்பதால், இப்படத்தின் அறிவிப்பு வெளியானவுடனே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு உண்டாகியிருப்பது குறிப்பிடத் தக்கது.

நடிகர் விஜய் சேதுபதி டாப்ஸியுடன் இணைந்து நடித்துள்ள அனபெல் சேதுபதி திரைப்படம் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியாகிறது. இதேபோல் சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண் மற்றும் பலர் நடித்துள்ள கசடதபற திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் ஆகஸ்டு 27-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.

Also Read: எடுத்து கொண்ட களத்திலும், கதை சொல்லிய விதத்திலும் - கசடதபற திரை விமர்சனம்

Also Read: “Love-ல இருந்தாலே இப்டிதான்.. பாக்குற எல்லாம்”.. க்யூட் ஜோடியா இருக்கே.. வைரல் ஆகும் Romance Reels வீடியோ!

vijay sethupathi Sundeep Kishan team up ranjith jeyakodi michael

People looking for online information on “Love-ல இருந்தாலே இப்டிதான்.. பாக்குற எல்லாம்”.. க்யூட் ஜோடியா இருக்கே.. வைரல் ஆகும் Romance Reels வீடியோ, Dhanush, MakkalSelvan, Michael, Ranjit Jeyakodi, Sundeep Kishan, Vijay Sethupathi will find this news story useful.