www.garudabazaar.com

“விஜய்க்கு பிரியாணி பிடிக்கும்.. சாம்பார்ல கொத்தமல்லி Disturbance-னு சொல்லுவாரு” - ஷோபா சமையல்.! Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய், தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக விளங்கி வருகிறார்.விஜய் நடிப்பில் தற்போது வம்சி பைடிபல்லி இயக்கும் வாரிசு திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

vijay like biryani shoba exclusive cooking exclusive

இதனிடையே வாரிசு திரைப்படத்தின்படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. முன்னதாக வாரிசு திரைப்படத்தின் சிங்கிள் பாடலான  ரஞ்சிதமே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தாயாரும், இயக்குனர் & நடிகர் எஸ்ஏ சந்திரசேகரின் மனைவியுமான ஷோபா சந்திரசேகர், பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் பிரத்தியேக சமையல் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

vijay like biryani shoba exclusive cooking exclusive

இதில் விஜய்க்காக பிரத்தியேகமான பிரட் பிரியாணியை தம்முடைய தோழி ரூபாவுடன் இணைந்து ஷோபா சமைத்தார். சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது பேசிய ஷோபா, “விஜய்க்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். ஞாயிற்றுக்கிழமை ஆனால் அவர் வீட்டுக்கு வந்தால் பிரியாணி மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொல்லி சாப்பிட்டு விடுவார், குறிப்பிட்ட அசைவ பிரியாணி என்று சொல்வதைவிட பிரியாணி என்றாலே அவருக்கு பிடிக்கும். சாம்பாரைப் பொறுத்தவரையில் நடுவில் நடுவில் வரக்கூடிய கொத்தமல்லியை தொந்தரவாக இருக்கக்கூடிய ஒன்று என்று சொல்லுவார்.” என்று கூறினார்.

vijay like biryani shoba exclusive cooking exclusive

மேலும் தன்னுடைய கணவர் மற்றும் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் குறித்து பேசிய ஷோபா, “நான் ரசம், பருப்பு தொகையல் வைத்தால் கூட நன்றாக இருப்பதாக சொல்லி சாப்பிடுவார்” என்று கூறிய ஷோபா, “இந்த பிரட் பிரியாணியை செய்து வாரிசு பட சூட்டிங்கில் இருக்கும் விஜய்க்கு கொடுத்துவிட்டு நாமும் சாப்பிடலாம்” என்று கலகலவென்று பேசினார். இந்த நிகழ்ச்சியின் முழு வீடியோவை இணைப்பில் காணலாம்.

“விஜய்க்கு பிரியாணி பிடிக்கும்.. சாம்பார்ல கொத்தமல்லி DISTURBANCE-னு சொல்லுவாரு” - ஷோபா சமையல்.! VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

vijay like biryani shoba exclusive cooking exclusive

People looking for online information on Ranjithame, S Thaman, Sri Venkateshwara Creations, Varisu, Varisu first single, Vijay will find this news story useful.