www.garudabazaar.com

காயத்தில் இருந்து மீண்டு வரும் அருண் விஜய்.. ஜிம்மில் இருந்து வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Arun Vijay Recovering from Injury LATEST Instagram Post

Also Read | பாரிஸ் நகர சாலைகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்... வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ!

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் 'யானை' & 'சினம்' ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதேபோல் சோனி லிவ் தளத்தில் தமிழ் ராக்கர்ஸ் சீரிஸூம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது அருண் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் A.L விஜய் உடன் இணைந்துள்ளார். ஏ.எல்.விஜய், நடிகர் அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். பின் தலைவா படத்தை நடிகர் விஜய் நடிப்பிலும், தாண்டவம் படத்தை சியான் விக்ரம் நடிப்பிலும் இயக்கியவர். கடைசியாக கங்கனா ரனாவத்தை வைத்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தலைவி படத்தை இயக்கினார்.

Arun Vijay Recovering from Injury LATEST Instagram Post

இந்த அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் நடைபெற்றது . ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அருண் விஜய்யுடன் நடிகை எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு "அச்சம் என்பது இல்லையே" என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டது.

Arun Vijay Recovering from Injury LATEST Instagram Post

இந்த படத்தின் முதல் கட்ட லண்டன் படப்பிடிப்பை நிறைவு செய்து படக்குழு  சென்னை திரும்பி உள்ளது. மேலும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்லில் நடந்தது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Arun Vijay Recovering from Injury LATEST Instagram Post

இச்சூழலில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய் காலில் காயம் ஏற்பட்டது.‌ இந்த காயத்தில் இருந்து மீண்டு வரும் நடிகர் அருண் விஜய் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.‌அதில் நீண்ட நாட்களுக்கு பிறகு உடற்பயிற்சி செய்வதாக அறிவித்து, ஜிம்மில் இருந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Also Read | பிரபல OTT-யில் ரிலீஸாகும் 'GOD FATHER'.. சிரஞ்சீவி & சல்மான் கான் FANS-க்கு ட்ரீட் தான்!

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay Recovering from Injury LATEST Instagram Post

People looking for online information on Arun Vijay, Arun Vijay Latest Photo will find this news story useful.