www.garudabazaar.com

மண்டைய பிச்சுக்கும் ரசிகர்கள்.. விஜய் தேவரகொண்டாவுடன் பேசிட்டு இருக்கும் இந்த நடிகை யாரு..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அர்ஜுன் ரெட்டி என்னும் திரைப்படத்தின் மூலம், ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.

vijay deverakonda and ananya pandey video gone viral

இதனைத் தொடர்ந்து, 'கீதா கோவிந்தம்', 'நோட்டா', 'டியர் காம்ரேட்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.

லிகர் திரைப்படம்

விஜய்க்கு பெண் ரசிகர்கள் அதிகமுள்ள நிலையில், அடுத்ததாக அவர் நடித்து வரும் 'லைகர்' திரைப்படத்தின் மீது தான், ஒட்டுமொத்த ரசிகர்கள் பார்வையும் தற்போது திரும்பியுள்ளது. இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் மைக் டைசன்

பாலிவுட் நடிகையான இவர் நடித்து சமீபத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் தான் 'கெஹ்ரியான்'. குத்துச் சண்டை கதையை மையமாக வைத்து உருவாகி வரும் 'லைகர்' திரைப்படத்தில், நிஜ குத்துச் சண்டை வீரரான மைக் டிசைனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தின் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர், ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டு நிற்பது தொடர்பான வீடியோ ஒன்றை, நடிகை சார்மி கவுர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அசத்தலான வீடியோ

விஜய் எந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என கேட்ட படியே வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார் சார்மி. இருவருக்கும் அருகில் சார்மி சென்ற பிறகு, அனன்யா என்பது தெரிய வர ஆச்சரியத்தில் உறைகிறார் அவர். தன்னுடைய கேப்ஷனில், "அசத்தலான லைகர்' ஜோடி. உங்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன்" என சார்மி குறிப்பிட்டுள்ளார்.

 

மிகவும் ஸ்மார்ட் ஆக ஒரு பக்கம் விஜய் தேவரகொண்டா இருக்க, இன்னொரு பக்கம் படு கிளாமரில் சொக்கி இழுக்கும் அனன்யா பாண்டே ஆகியோரின் வீடியோ, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

vijay deverakonda and ananya pandey video gone viral

People looking for online information on Ananya Panday, Charmi, Liger, Puri Jagannadh, Vijay Deverakonda will find this news story useful.